எப்போதும் அவன் நினைவாகவே இருக்கும் .
அவனை சந்திப்பதாய்ச்
சொன்ன நேரம்
நன்றாய் நினைவிருந்தும்
சொன்ன நேரம்
நன்றாய் நினைவிருந்தும்
தவிர்த்திடத் தோணும் .
காரணம் கூற
கற்பனைகள் விரியும்
கூச்சமின்றி பொய் வரும்
செல்போனில் அவன் நம்பருக்கு மட்டும்
பதில் கொடுப்பதில்லை
புதிய அழைப்புகளுக்கும் பதில் தருவதில்லை
ஒருவேளை அவனாக இருந்தால் ?
அவனே தேடி வந்தாலும்
அவன் கண்ணில் படாமல்
ஆட்டம் காட்டிடத் தோணும்
அவனைத் தவிர்க்க நினைத்தாலும்
இரவெல்லாம் அவன் நினைவால்
தூக்கம் வராது
உண்ணும் உணவிலும்
பருகும் நீரிலும்
அவன் உருவே தெரியும்
என் உடலோ மெலியும்
நான் வீட்டை விட்டு புறப்படும் வேளையையும்
திரும்பும் வேளையையும்
என் வீட்டாரை விட
அவனே சரியாய் தெரிந்து வைத்துள்ளான் .
என் தோழமை வட்டங்களும்
உறவு சுற்றங்களும்
யார் யார் என
தெளிவாக அறிந்துள்ளான்
நான் எத்தனைதான் தவிர்த்தாலும்
அவன் என்னமோ விடுவதாய் இல்லை.
எத்தனை நாள் தான்
இத்தனை நாடகம் ?
அவனை நேருக்கு நேர் காணும்
தைரியம் என்றுதான் வரும் ?
இத்தனை ஊடலும்
காதலர்களுக்கு மட்டும் அல்ல
.
.
.
.
.
.
கடன்காரர்களுக்கும் தான் !