Follow by Email

Thursday, November 3, 2011

கர்பத் தடை நஞ்சையும் , புஞ்சையும் 
காடுகளும் , தோப்புகளும் 
வீடுகளாகிப்  போகின்றன .

ஒவ்வொரு வீட்டின் முன்னும் 
கட்டாயம் ஒரு மரம் வளர்க்கிறோம் .
சில வீட்டு கதவுகளில் 
' மரம் வளர்ப்போம் ' எனும் பலகையாவது  உண்டு .

பூமிக்கு செய்த கர்பத்தடைக்கு
மக்களின் பிரயச்சித்தமோ  ?

--------------------------------------------------------------

வாழ்க வளமுடன் ! 

Wednesday, November 2, 2011

என் காதலிஅன்பே
என் பதினைந்தாம் வயதில்தான்  
நண்பனின் வீட்டில் உன்னை 
முதன்முதலில்  பார்த்தேன்.  

அமெரிக்க மாமா வந்துள்ளார் 
வா-  என்றான் என் நண்பன். 
அறிமுகமும் செய்து வைத்தான். 
அப்போதுதான் 
அவரோடு வந்து இருந்த
உன்னைப் பார்த்தேன்.
 
'முதல் பார்வை காதல்' என்பதை
கேலி பேசும் நான் -இன்று
அதன் உண்மை உணர்ந்தேன் 

எட்ட நின்று  விழியால் அளந்தேன் .
எடுப்பான உன் தோற்றமும் 
அலட்சியமான உன் வேகமும் 
என்னை  நித்திரை மறக்கச் செய்தன.

அன்றுமுதல்....
நீ என்னோடு என்
வீட்டில்  இருப்பதாயும்
உன் உடலில் என்
விரல்கள் படுவதாயும்
என்னுள் தினமும்
பல வித கனவுகள்.

எப்போதும் உன் நினைவே.


நண்பனின் இல்லத்தில்
நீ அறியாது போனாலும்

 தினம் ஒருமுறையாவது 
 உன்னைப் பார்க்காது போனால் - எனக்கு
பைத்தியமே பிடித்துவிடும் .

திடீரென ஒருநாள்
"மாமா  அமெரிக்க சென்றுவிட்டார்" - என
நண்பன் சொன்னான்

பருவ வயதல்லவா எனக்கு
நீ இல்லாதத வெற்றிடத்தை
நிரப்ப வழி தெரியாது தவித்தேன் .

 விளையாடும் மைதானம் மறந்தேன்.
உண்டி குறைந்து - உடலும் தான்..
 அரைகுறை தூக்கத்தால் 
 விழி எல்லாம் சிவந்தேன் .

எப்படி உன் மீது
இப்படி மயங்கினேன்
எனக்கேத் தெரியவில்லை .

 என் நிலை கண்டு 
அப்பா திகைத்தார்  
 என் நிலையின் காரணம் யாது என
பலவாறாய் வினவினார்

ஒரே மகன் நான்.
 பள்ளி இறுதி ஆண்டு வேறு 
 கவலை இருக்கத்தா அவருக்கு 

 மெல்ல உன்னைப் பற்றி 
அவரிடம் சொன்னேன் .
இதுவரை என் தேவைகள்
எதையும் மறுக்கதவர் -இன்று
முதல் முறையாய்
முகம் சிவந்தார் .

"இப்போதுஇது தேவையா? " என்றார் 
"உன்  எதிர்காலமே இந்த ஆண்டுதான்.
 படிப்பில் மட்டும் கவனம் வை.
 எல்லாவற்றிற்கும் ஒரு காலம்  உண்டு .
 உன் நிலை உயர்ந்தால் 
தானாய் எல்லாம் தேடி வரும் "
என்று எவ்வளவோச்  சொன்னார்.

ஆயின்....

என் பிடிவாதம் வலுத்தது .
ஆம்.
இனி நீ இன்றி
நான் இல்லை.

அப்பா மெல்ல கரைந்தார்.
அம்மாவோ மிக  கடிந்தார்.
முடிவில் நான்தான் வென்றேன் .

அப்பா என் நண்பன் வீடு சென்று
உன்னை பற்றி விவரம் கேட்டார்
இதுவரை என் மனதில் மட்டும்
புகுந்திருந்த நீ
ஒரு நல்ல நாளில்
 என் வீட்டிற்கும்
குடி புகுந்தாய்

"+2 படிக்கும்போதேவா? " -  என
சுற்றம் முணுமுணுத்தது
பள்ளி தோழர்கள் வீட்டிற்கே  வந்து
வாழ்த்துக்கள் கூறினார்

 எனக்கோ கால்கள்
மண்ணில் பதிய வில்லை. 

இன்று நீ என்னோடு 
என் கட்டிலில் ..
அதுவும் என் மடி மீது .
எத்தனை நாள் கனவு 
இன்றோ நிஜம் .

நீ என் காதலி மட்டும் இல்லை 
நீ தான் என் உயிர் 
என் வாழ்வின் நிகழ் காலம் 
எதிர்காலம் எல்லாம்.

என்
உயர்வு , தாழ்வு எல்லாம் 
உன்னிடமே .

என் இனிய மடி கணினியே  !   
என் காதலியே !
எல்லாம் இனி  நீ தான்  !

 --------------------------------------------------------------வாழ்க வளமுடன் ! 
 

மருதாணி

இரவில் 
மருதாணி அவள் விரல்களில் 

காலையிலோ 
வண்ணங்கள் என் உடலிலே

 நன்றி மருதாணிக்கு !

-------------------------------------------------

வாழ்க வளமுடன் !

Tuesday, November 1, 2011

காதலை அறிந்தேன்

அன்பே 
ஆண்டுகள் சில ஆனாலும் - நம் 
திருமண வாழ்வில் 
காதலில் குறைவில்லை

திடீரென அன்னிய தேசம் செல்கிறேன் 
குடும்ப தொழிலுக்காக ..
இது அப்பாவின் ஆணை 

அந்நிய தேசம் சென்றிட ஆசைதான் - ஆயின் 
இதுவரை நாம் பிரிந்ததில்லை  ஓர் இரவும் 


மூத்தவனையும்,  இளையவளையும் கூட 
நீ இங்குதானே பெற்றாய் ...
எனை பிரிய மனம் இன்றி 


நீ என் தலை கோதி 
சென்று வா என்றாய் 
புறப்பட்டேன் 

தூரத்தில் நான் ..
ஆயினும் அனுதினமும் அதிகரிக்கும் 
உன் நினைவுகளின் அடர்த்திகள் 

பருவ வயதில் 
காதல் வயபட்டதில்லை நான்.
கல்லாவே  கதி என்று இருந்து விட்டேன் 

முப்பது ஐந்துக்கு மேல் இன்று 
உன்னால் காதலின் வலி தனை  உணர்கிறேன் 

காதலால் மனமும் 
தினம் கலந்த காமத்தால் உடலும் 
என்னை துடிக்க வைக்கின்றன 
தூக்கம் கெடுக்க வைக்கின்றன 

வீட்டிலே 
பகல் பொழுதுகளில் நாம் 
அதிகம் பேசிக் கொள்ளுவது   கிடையாது 

நேரமும் இருப்பது  இல்லை 
குடும்பத்  தொழில் அப்படி
இரவில் ......
 கிசு கிசுப்பான பேச்சும், பாட்டும் 
நம் காதலை தூண்டும் 
நாளும் இன்பங்கள் கூடும்


கடல் தாண்டி வந்தும் 
இரவு பகலாய்
உன் நினிவு அலையாய் அடிக்குதடி .
 உணர்வுகள் சுனாமியாய் சுழ்ற்றுதடி.

உணர்ச்சி போருடன் 
உற்ற அலுவலையும்  .
குறைவற முடித்தேன் .

திரும்பிடும் நாளும் வந்தது .
விமானம் ஏறியது முதல் 
உடலும் உள்ளமும் என் வசம் இல்லை .

பத்து நாளில் என் பலவீனம் என்ன என 
தெளிவாய் அறிந்தேன் .
உன்னிடம்  ஒப்புக்கொள்ளுவதில் 
எனக்கு வெட்கமில்லை .

வீடும் வந்தது .
உறவுகள் சூழ்ந்தன .
உடல் நலம்,
பிரயாணம்,
தொழில் 
என
கேள்விகளும் சூழ்ந்தன .

அத்தனைக்கும் என்  வாய் மட்டுமே 
பதில் கூறியது.

 உள்ளமோ ..
உடலின் தேவைக்கு 
விருந்து எப்போது என நேரம் தேடியது 

அலுவல் உடன் அழைத்திட 
அப்பாவோடு விரைந்தேன் 
தவிர்க்க இயலாமல் .
இரவுதான் திரும்பினேன் .


இரவு உணவு உண்டேன்.....
என்னவென்றே தெரியாமல் .

குழந்தைகளோடு கதை அளந்தேன்.....
சீக்கிரமாய் அவர்களை உறங்கச் செய்ய .


அந்த தருணமும் வந்தது .
என உடல் எல்லாம்
அக்னியின்   ஆட்சி .
என மூச்சுக் காற்றே 
அதன் சாட்சி .

முதல் இரவின் பக்குவம் கூட 
இன்று எனக்கு இல்லை .

அத்தனை தவிப்போடும் 
அள்ளி அணைத்தேன்  உன்னை .
தேவைகள்  என்னவென 
தயங்காமல் செவி உரைத்தேன் .


ஏதாவது பேசு பேசு 
என உளறினேன் நான் .

நீயோ சின்ன புன்னகையால் 
என் பேச்சினை முடித்தாய் .


மெல்லச்  சரிந்தாய் .
விரல்களால் முடி கலைத்தாய்.
விரலோடு விரல் இனணத்து 
மெல்ல நெருக்கினாய் .

பட்டும் படாத அணைப்போடு
மெல்ல என் நெற்றியில்
முத்தமிட்டாய் .

அடங்காத என் தேவை எல்லாம்
சட்டென அடங்கின .

தாபத்தால் பிரிந்த என்
கண் இமைகள்
மெதுவாய் இணைந்தன .

உன் மூச்சுக்காற்று
என் காதோரம் படும்
சுகம் ஒன்றே போதும்
என உணர்கிறேன் இப்போது .


உன் அண்மை என்னை
உறங்கச் செய்கிறது .
உன் அணைப்பு மட்டுமே இப்போது
போதும் என்று ஆகிறது.
உன் ஆளுமை மட்டுமே என்
பலம் எனத் தெரிகிறது .

அன்பே !
காதல் என்பதை நன்கு உணர்ந்தேன் .
நன்றிகள் பல உனக்கு .----------------------------------------------------------------வாழ்க வளமுடன் !
 

கண்கள்


ஊசியாய் இறங்கி உள்ளமெல்லாம்
குத்துகின்றாய் - ஊடலில் 

விழியோர அஞ்சனமே மருந்தாய் 
தடவுகிறாய் - கூடலில் 

ஆயுதமே மருந்தாகும் அதிசயத்தை 
இங்குதான் கண்டேன் !-------------------------------------------------------------

வாழ்க வளமுடன் !

பூக்கள்


சூரியனின்   கேமரா ப்ளாஷுக்கு 
தாவரங்களின்   புன்னகை.
வானவில்லிற்குப் போட்டியாய்
பூமியின்   வண்ண வில். 

இயந்திர வாழ்க்கையின்
இருகிய மனிதற்கு
இயற்கை அன்னையின்  
புத்துணர்ச்சி  வைத்தியம் .

--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன் !

பசுமை

 அடை மழையின் குளிருக்கு 
பூமி தாய் இழுத்து போர்த்திய கம்பளி

மழை அன்னை தந்த விருந்துக்கு 
தாவரங்களின் எதிர் விருந்து 

புதிய ஸ்ரிஷ்டிக்கு அழைப்பு விடும் 
இயற்கையின் பச்சைக்  கொடி

----------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன் !

மழை

 கருமேகங்களின் ஓட்டத்தி்ல்  பிறந்த
 சுத்தமான - வியர்வை துளி.

 மண்  விண்ணுக்கு அனுப்பிய
கடிதத்தின் - காதல் பதில்.

விடுமுறை வேண்டும் மாணவனின்
கண்களின்  - சந்தோஷ வரம்.

மிச்ச  சொச்ச விவசாய நிலத்திற்கு
இறைவனின் - மானியம்.

பருவத்தில் பெய்யும் போது
அது - எதிர்பார்த்த காதலியின் வருகை.

பெய்தாலும் பொய்த்தாலும்
மக்கள்பொறுத்துக்கொள்ளும் -
ஆளும் கட்சி

மழையே நீ வாழ்க !
--------------------------------------------------------------

வாழ்க வளமுடன்.

 
வருக! வணக்கம் !

இனிய புதிய உறவுகளே ,
பொதிகை தென்றலின்  படைப்பிற்கு 
தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

 
கண்டும் கேட்டும் அறிந்தும்
என் உள்ளே நான் உணர்ந்த 
என் உள்ளே நான் மலர்ந்த 
விஷயங்களை உங்களோடு 
சிறு கவிதை நடையில் பகிர்ந்துகொள்ளும் 
பக்கம் இது .நன்றிகள் பல

வாழ்க வளமுடன்