Tuesday, November 1, 2011

காதலை அறிந்தேன்

அன்பே 
ஆண்டுகள் சில ஆனாலும் - நம் 
திருமண வாழ்வில் 
காதலில் குறைவில்லை

திடீரென அன்னிய தேசம் செல்கிறேன் 
குடும்ப தொழிலுக்காக ..
இது அப்பாவின் ஆணை 

அந்நிய தேசம் சென்றிட ஆசைதான் - ஆயின் 
இதுவரை நாம் பிரிந்ததில்லை  ஓர் இரவும் 


மூத்தவனையும்,  இளையவளையும் கூட 
நீ இங்குதானே பெற்றாய் ...
எனை பிரிய மனம் இன்றி 


நீ என் தலை கோதி 
சென்று வா என்றாய் 
புறப்பட்டேன் 

தூரத்தில் நான் ..
ஆயினும் அனுதினமும் அதிகரிக்கும் 
உன் நினைவுகளின் அடர்த்திகள் 

பருவ வயதில் 
காதல் வயபட்டதில்லை நான்.
கல்லாவே  கதி என்று இருந்து விட்டேன் 

முப்பது ஐந்துக்கு மேல் இன்று 
உன்னால் காதலின் வலி தனை  உணர்கிறேன் 

காதலால் மனமும் 
தினம் கலந்த காமத்தால் உடலும் 
என்னை துடிக்க வைக்கின்றன 
தூக்கம் கெடுக்க வைக்கின்றன 

வீட்டிலே 
பகல் பொழுதுகளில் நாம் 
அதிகம் பேசிக் கொள்ளுவது   கிடையாது 

நேரமும் இருப்பது  இல்லை 
குடும்பத்  தொழில் அப்படி
இரவில் ......
 கிசு கிசுப்பான பேச்சும், பாட்டும் 
நம் காதலை தூண்டும் 
நாளும் இன்பங்கள் கூடும்


கடல் தாண்டி வந்தும் 
இரவு பகலாய்
உன் நினிவு அலையாய் அடிக்குதடி .
 உணர்வுகள் சுனாமியாய் சுழ்ற்றுதடி.

உணர்ச்சி போருடன் 
உற்ற அலுவலையும்  .
குறைவற முடித்தேன் .

திரும்பிடும் நாளும் வந்தது .
விமானம் ஏறியது முதல் 
உடலும் உள்ளமும் என் வசம் இல்லை .

பத்து நாளில் என் பலவீனம் என்ன என 
தெளிவாய் அறிந்தேன் .
உன்னிடம்  ஒப்புக்கொள்ளுவதில் 
எனக்கு வெட்கமில்லை .

வீடும் வந்தது .
உறவுகள் சூழ்ந்தன .
உடல் நலம்,
பிரயாணம்,
தொழில் 
என
கேள்விகளும் சூழ்ந்தன .

அத்தனைக்கும் என்  வாய் மட்டுமே 
பதில் கூறியது.

 உள்ளமோ ..
உடலின் தேவைக்கு 
விருந்து எப்போது என நேரம் தேடியது 

அலுவல் உடன் அழைத்திட 
அப்பாவோடு விரைந்தேன் 
தவிர்க்க இயலாமல் .
இரவுதான் திரும்பினேன் .


இரவு உணவு உண்டேன்.....
என்னவென்றே தெரியாமல் .

குழந்தைகளோடு கதை அளந்தேன்.....
சீக்கிரமாய் அவர்களை உறங்கச் செய்ய .


அந்த தருணமும் வந்தது .
என உடல் எல்லாம்
அக்னியின்   ஆட்சி .
என மூச்சுக் காற்றே 
அதன் சாட்சி .

முதல் இரவின் பக்குவம் கூட 
இன்று எனக்கு இல்லை .

அத்தனை தவிப்போடும் 
அள்ளி அணைத்தேன்  உன்னை .
தேவைகள்  என்னவென 
தயங்காமல் செவி உரைத்தேன் .


ஏதாவது பேசு பேசு 
என உளறினேன் நான் .

நீயோ சின்ன புன்னகையால் 
என் பேச்சினை முடித்தாய் .


மெல்லச்  சரிந்தாய் .
விரல்களால் முடி கலைத்தாய்.
விரலோடு விரல் இனணத்து 
மெல்ல நெருக்கினாய் .

பட்டும் படாத அணைப்போடு
மெல்ல என் நெற்றியில்
முத்தமிட்டாய் .

அடங்காத என் தேவை எல்லாம்
சட்டென அடங்கின .

தாபத்தால் பிரிந்த என்
கண் இமைகள்
மெதுவாய் இணைந்தன .

உன் மூச்சுக்காற்று
என் காதோரம் படும்
சுகம் ஒன்றே போதும்
என உணர்கிறேன் இப்போது .


உன் அண்மை என்னை
உறங்கச் செய்கிறது .
உன் அணைப்பு மட்டுமே இப்போது
போதும் என்று ஆகிறது.
உன் ஆளுமை மட்டுமே என்
பலம் எனத் தெரிகிறது .

அன்பே !
காதல் என்பதை நன்கு உணர்ந்தேன் .
நன்றிகள் பல உனக்கு .



----------------------------------------------------------------



வாழ்க வளமுடன் !
 





No comments:

Post a Comment